உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள சர்தானா பகுதியில், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவிடுவதற்காக துப்பாக்கியைக் கையாண்ட இளைஞர்களுக்கு இடையே நடந்த விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உவைஷ் மற்றும் ஃபஹிம் ஆகிய இரு நண்பர்கள் வனப்பகுதிக்குச் சென்று ஆபத்தான முறையில் துப்பாக்கியுடன் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது உவைஷ் வானத்தை நோக்கிச் சுட்டதோடு, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கியைத் தனது நண்பன் ஃபஹிமை நோக்கித் திருப்பிச் சுட்டுள்ளார்.
<a href=”http://

“>
இதில் ஃபஹிமின் கையில் குண்டு பாய்ந்து அவர் வலியால் துடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காயமடைந்த இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புகாரளிக்கப்படாத போதிலும் காவல்துறையினர் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.