உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் துபாயில், மாத வாடகை மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் விண்ணைத் தொடும் நிலையில், அங்கு வசித்து வரும் 23 வயதான சூர்யா காயத்ரி (Surya Gayathry) என்ற இளம் அக்கவுண்டன்ட் பெண் தனது மாதந்திர பட்ஜெட் குறித்த விபரங்களை வீடியோவாக வெளியிட்டு ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

வாடகை தான் மிக முக்கியப் பெரும் செலவு என்றாலும், தனக்கு அவர் பணிபுரியும்  இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள சூர்யா காயத்ரி, துபாயில் தங்குவதற்கானறுவனமே (Company) இலவசமாகத் தங்குவதற்குக் குடியிருப்பு வசதியை வழங்கியுள்ளதால் பெரும் தொகை மிச்சமாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Surya Gayathry (@_suryagayathry_)

அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் பெரிய உணவகங்கள் எதுவும் இல்லாததால், வெளி உணவுகளைத் தவிர்த்துத் தினமும் அவரே சொந்தமாகச் சமைத்துச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்காக வாரத்திற்கு 100 திர்ஹம்ஸ் வீதம், மளிகைப் பொருட்களுக்கு (Grocery) மாதம் 500 திர்ஹம்ஸ் செலவிடுகிறார்.

மேலும், வீட்டு வைஃபை (Wi-Fi) இணைப்பிற்கு 200 திர்ஹம்ஸும், அலுவலகமும் வீடும் ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ளதால் போக்குவரத்துச் செலவாக (Nol card & Taxi) மாதம் 100 முதல் 110 திர்ஹம்ஸ் மட்டுமே செலவாவதாகக் கூறியுள்ளார்.

இதர செலவுகளான வெளி உணவுகளுக்கு 100 திர்ஹம்ஸ், துணிமணிகள் மற்றும் ஷாப்பிங்கிற்கு 100 முதல் 150 திர்ஹம்ஸ் மற்றும் குடிநீர், டெலிவரி கட்டணங்களுக்கு 50 திர்ஹம்ஸ் என அனைத்தையும் கூட்டித் தனது ஒட்டுமொத்த மாதச் செலவையும் வெறும் 1,100 திர்ஹம்ஸிற்குள் முடித்துவிடுவதாகக் கணக்குக் காட்டியுள்ளார்.

துபாயில் இவ்வளவு குறைந்த செலவில் வாழ்வது என்பது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களைச் சார்ந்தது என்றாலும், சூர்யாவின் இந்தச் சிக்கனமான பட்ஜெட் மேனேஜ்மென்ட் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் லைக்குகளைப் பெற்று இணையத்தில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.