பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா பாக்டீரியா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 25-ம் தேதி மடோனா பாக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மடோனாவின் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக மடோனாவின் மேலாளர் கை ஒரிசி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் பாப் பாடகி மடோனாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் கனடாவின் வான்கூவரில் வருகின்ற ஜூலை 15-ம் தேதி தொடங்கவிருந்த பாப் ஐகான் கொண்டாட்ட சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்