சாம்சங் நிறுவனமானது Galaxy M34 5G ஸ்மார்ட் போனை வருகிற ஜூலை 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. சாம்சங்கின் Galaxy M-Series மிகவும் பிரபலமான ஒன்றாகும். அதோடு ஸ்மார்ட் போன் 50MP (OIS) நோ ஷேக் கேமரா, 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் பிரிவில் முன்னணி 6000 mAh பேட்டரி உடன் வரும். Galaxy M34 5G 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உடன் வரும். விஷன் பூஸ்டர் தொழில்நுட்பத்துடன் பயனாளர்கள் பிரகாசமான சூரிய ஒளியில் கூட ஆழ்ந்து பார்க்கும் அனுபவத்தை பெறுவர்.

அதேசமயம் 120Hz Refresh வீதம் மென்மையான ஸ்க்ரோலிங் செய்ய பயன்படும். Galaxy M34 5G 50MP (OIS) நோ ஷேக் கேமரா உடன் வருகிறது. நிறுவனத்தின் கூற்று அடிப்படையில், இது உயர் தெளிவுத்திறன் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை தெளிவாக எடுப்பதற்கு உங்களை அனுமதிக்கும். கை நடுக்கம் (அ) தற்செயலான குலுக்கல்களால் ஏற்படும் மங்கலான புகைப்படங்களையும் இது சரிசெய்யும்.

Galaxy M34 5G ஆனது 16 வெவ்வேறு உள்ளமைக்கப்பட்ட லென்ஸ் விளைவுகளை கொண்டுள்ளது. இது இளம் வயதினரை ஸ்மார்ட்போன் கேமரா வாயிலாக தங்களின் சுயத்தை வெளிப்படுத்த அனுமதிக்கிறது என நிறுவனம் ஒரு வெளியீட்டில் தெரிவித்து உள்ளது. Galaxy M34 5G, 6000 mAh பேட்டரி உடன் வரும். இது பயனர்கள் நீண்டநேரம் இணையத்தில் உலாவுதல், கேமிங் மற்றும் அதிக நேரம் பார்ப்பது ஆகியவற்றை செய்ய உதவும். 2 நாட்கள் வரையிலும் பேட்டரி பேக்கப்பை வழங்க இயலும் என நிறுவனம் கூறுகிறது.