அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த  வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நேற்றோடு நிறைவடைந்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக திங்கள்கிழமை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், டெல்லி தலைமை இரு தரப்பும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதைப் போல உச்சநீதிமன்றமும் அரசியல் ரீதியாக தீர்வு காண சொல்லவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை இப்படி மட்டும் தீர்ப்பு வந்தால் அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை தான் தொடரும். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மீண்டும் ஓ. பன்னீர் செல்வத்துடன் கைகுலுக்கியே ஆகவேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.