தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அந்த வகையில் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கான குறை தீர்ப்பு கூட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சென்னையில் உள்ள‌ 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை பெறுதல் தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு ரேஷன் கடைகளில் மூத்த குடிமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்கள் வாங்க முடியாத நிலை இருப்பதால் அவர்களுக்கு சலுகை வழங்கும் விதமாக அங்கீகார சான்றும் முகாம்களில் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தாலும் அதையும் குறை தீர்ப்பு கூட்டத்தில் மக்கள் சொல்லலாம்.