ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம்வகாடு தாலுகாவில் தற்போது தாசில்தாராக பணியாற்றி வருபவர்  ராமையா. இவர் முன்பு பெல்லக்கூர் தாலுகாவில் பணியாற்றியபோது, அங்குள்ள ஒரு பெண் கிராம வருவாய் அதிகாரியுடன் (VRO) பேசினார்.

அப்போது அவர் மீது ஆசை வைத்த ராமையா, பலமுறை தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இடமாற்றம் பெற்ற பின்னும், அவரது ஆசை குறையவில்லை. இதன் காரணமாக அவர் ஆபாச மெசேஜ்கள், வீடியோ கால் என பல்வேறு வழிகளில் அந்த பெண் அதிகாரியை பாலியல் ரீதியில் டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு, தாசில்தார் ராமையா திடீரென அந்த பெண் அதிகாரியின் வீட்டிற்கே சென்றுள்ளார். அந்த நேரத்தில் பெண் அதிகாரி வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி, அவரது அறைக்குள் சென்று நிர்வாணமாக நின்று தொந்தரவு செய்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ந்துபோன பெண் அதிகாரி, அருகில் இருந்த தன் தாயை அழைத்தார். ஏற்கனவே சம்பவங்களை தெரிந்திருந்த அம்மா, உடனே ஓடி வந்து, துடைப்பக்கட்டையால் தாக்கி விரட்டியதால், தாசில்தார் அவசரமாக அரைக்குறை ஆடையில் ஓடிப்போனார்.

இந்த சம்பவம் வீட்டின் அருகிலிருந்தவர்களால் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது, அது தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. தாசில்தார் ராமையா மீது பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தொந்தரவு செய்யப்பட்ட பெண் அதிகாரி, தன் மீது வந்த அழுத்தங்களை அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளதுடன், தற்போது பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இருப்பினும், தாசில்தார் தரப்பில் பரப்பப்படும் வேறுபட்ட தகவல்கள் விவாதத்திற்கு இடமளித்துள்ளன. தாசில்தாரும் பெண் அதிகாரியும் முன்பே நெருங்கிப் பழகியவர்கள் என்றும், இந்த சம்பவம் திட்டமிட்ட பழிவாங்கல் என்றும் அவர் தரப்பில் கூறப்படுகிறது. “பெண் அதிகாரி தான் வீட்டுக்கு வரச்சொன்னவர். ஆனால் பின்னர் தன்னை அவமானப்படுத்த திட்டமிட்டார்” என்று தாசில்தார் தரப்பு குற்றச்சாட்டுகின்றது.

தற்போது, இருவரின் வாதங்களில் மாறுபாடுகள் உள்ளதால், அதிகாரிகள் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தாசில்தார் ராமையா நிர்வாணமாக பெண் அதிகாரியின் வீட்டில் சென்ற சம்பவமும், அவர் தாக்கப்பட்டதையும் காட்டும் வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், இது தன்னடக்கமும் ஒழுங்குமுறையும் காக்க வேண்டிய அரசு அதிகாரியின் செயல் என பொதுமக்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.