நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் ஒரு பெண் தீ மிதிக்க தயங்கி நின்ற நிலையில் அந்தப் பெண்ணை முதியவர் ஒருவர் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
அப்போது அந்த முதியவர் தவறுதலாக அந்த பெண்ணோடு தீக்குழியில் விழுந்து விட இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Watch | நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அடுத்த வடக்குப்பொய்கைநல்லூரில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தீமிதிக்க தயங்கி நின்ற பெண்ணை முதியவர் ஒருவர் தூக்கிச் செல்லும்போது இருவரும் தீக்குழியில் விழுந்து படுகாயம்!
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு… pic.twitter.com/TvyLMJ4agj
— Sun News (@sunnewstamil) September 26, 2025
