பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (செப்டம்பர் 18) இரவு காலமானார். இந்த செய்தி பரவியதும், திரையுலகம் துயரத்தில் ஆழ்ந்தது. இதை அறிந்த நடிகர் தனுஷ், நள்ளிரவே அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அங்கு ரோபோ சங்கரின் குடும்பத்தினருடன் பேசிச் சமாதானப்படுத்திய தனுஷ், குறிப்பாக அவரது மகள் இந்திரஜா சங்கருக்கு ஆறுதல் கூறினார்.

அந்த நேரத்தில், தந்தையை இழந்த துயரத்தில் வாடிய இந்திரஜா, தனுஷின் தோளில் சாய்ந்து கதறி அழுதது, அங்கே இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. ரோபோ சங்கர் தனது மகளை மிகவும் நேசித்தவர் என்பதும், அவர் எப்போதும் மகள் மீது எல்லையற்ற பாசம் கொண்டிருந்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ரோபோ சங்கரின் திடீர் மறைவு ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பெரும் இழப்பாகியுள்ளது.

“>