பிரபல கன்னட நடிகரும், ‘KGF’ திரைப்படத்தில் மும்பை ரவுடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்த தினேஷ் மங்களூரு (வயது 55) இன்று (ஆகஸ்ட் 25) காலமானார்.
உடல்நலக் குறைவால் பல மாதங்களாக சிகிச்சையில் இருந்த அவருக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை நேசித்த ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினேஷ் மங்களூரு, ‘KGF’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நிலைத்த மனிதராக மாறியவர். அதன் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு கன்னட மற்றும் பன்முகப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உடுப்பி மாவட்டம் குந்தபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் மரணம் அடைந்ததாக அப்பகுதியிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. அவரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.
