உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்லியா என்ற இடத்தில் நடந்த ஒரு திருமணத்தின் காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. மணமக்களை வாழ்த்துவதற்காக உறவினர்களும் விருந்தினர்களும் மேடையில் கூடியிருந்தபோது, அந்தத் திருமண மேடை திடீரென உடைந்து கீழே விழுந்ததே அதற்குக் காரணம்.

ராம்லீலா மைதானத்தில்  நடந்த இந்தச் சம்பவத்தின்போது, மணமக்களும் விருந்தினர்களும் கீழே விழுந்ததால், அங்கு கூச்சலும் பதட்டமும் நிலவியது. மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்ய ஏராளமான உறவினர்களும் விருந்தினர்களும் மேடையில் ஏறியபோது, ஏற்கனவே கூட்டமாக இருந்த அந்த மேடையால் பாரத்தைத் தாங்க முடியவில்லை. சில வினாடிகளில் அது சடாரென உடைந்து சரிந்தது. இதில் மணமக்கள், உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் கீழே விழுந்தனர்.

அதிர்ச்சியில் மக்கள் அனைவரும் தடுமாறி விழுந்த இந்தச் சம்பவத்தின் காணொளி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த விபத்தில், ஒரு முன்னாள் கிராமத் தலைவர் கால் முறிவுடன்  காயமடைந்தார் என்றும், மேலும் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.