அண்மையில் சோஷியல் மீடியாவில் மிக வித்தியாசமான ஒரு வீடியோ பகிரப்பட்டு உள்ளது. பொதுவாக திருமண நாளில் மணமகனும், மணமகளும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் இரண்டு பேரும் தங்கள் விசேஷ நாளை இன்னும் சிறப்பாக்க பல வித முயற்சிகளை எடுக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் மேடையில் மணமகன் மற்றும் மணமகள் இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் மணப்பெண் தன் வருங்கால கணவருக்காக மேடையில் நடனம் ஆடுகிறார். இதை பார்த்து அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும் மணமகன் யாரும் எதிர்பாரத ரியாக்ஷனை கொடுக்கிறார். டான்ஸ் ஆடும் மணமகள் பக்கம் அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. மணப்பெண்ணின் நடனத்தில் மணமகன் முற்றிலும் ஆர்வம் காட்டாமல் உள்ளார். மணமகளின் நடனத்தால் அவர் மகிழ்வதற்கு பதில் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.

https://www.instagram.com/reel/Crx28KpBcy-/?utm_source=ig_web_copy_link