மனதை நெகிழ வைக்கும் ஒரு நாயின் வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தொழிலாளி தரையில் வெட்டப்பட்டுள்ள குழிக்குள் நுழைந்து மண்வெட்டியால் மண்ணை வெளியே வீசுவதை காண முடிகிறது. அப்போது மேலே நின்று கொண்டிருந்த கருப்பு நிற நாய்க்குட்டி ஒன்று அவர் வெளியில் வீசும் மண்ணை 2 முன் கால்களாலும் தள்ளிக்கொண்டே இருக்கிறது.

அதன் கால்கள் மிகவும் சிறிதாக இருப்பதால் அதிக மண்ணை அகற்ற முடியவில்லை. எனினும் அது தன்னால் ஆன விதத்தில் மெதுவாக மண்ணை அகற்றி தொழிலாளிக்கு உதவுகிறது. இந்த வீடியோவானது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சி தரும் வகையில் இருக்கிறது..

https://www.instagram.com/reel/Ct_9KfjNV4n/?utm_source=ig_web_copy_link