இந்தோனேசியாவில் உள்ள என்ற பழங்குடியின மக்கள் மத்தியில், திருமணத்திற்குப் பிறகு மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் மூன்று நாட்கள் கழிப்பறையைப் பயன்படுத்தக் கூடாது என்ற விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சடங்கு பின்பற்றப்படுகிறது. இந்த மூன்று நாட்களும் மணமக்கள் வீட்டின் ஒரு அறைக்குள் தனிமையில் அடைக்கப்பட்டு, கழிப்பறையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
மேலயும் அவர்களின் கலாச்சாரத்தின்படி, இந்த சடங்கை முறையாகப் பின்பற்றுவது அந்தத் தம்பதியின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும், இதை மீறுவது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த விசித்திரமான வழக்கத்திற்குப் பின்னால் ஒரு மதநம்பிக்கையும் உள்ளது; திருமணத்திற்குப் பிறகு உடனடியாகக் கழிப்பறையைப் பயன்படுத்துவது மணமக்களின் தூய்மையைக் கெடுக்கும் என்றும், அங்குள்ள எதிர்மறை ஆற்றல்கள் தம்பதியின் திருமண வாழ்க்கையைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இந்த மூன்று நாட்களும் தம்பதியினருக்கு மிகக் குறைந்த அளவிலேயே உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது, இதனால் அவர்கள் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படாது. பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த வழக்கத்தை, இன்றும் அந்தச் சமூகத்தினர் மிகுந்த கட்டுப்பாடுடன் கடைப்பிடித்து வருகின்றனர்.
