தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் கண்டனம் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், தேர்தல் கூட்டணி குறித்துப் பேசினார். கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் விரைவில் இதற்காக ஒரு தனிக்குழுவை அமைத்து, கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.