தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் கொள்ளையடிப்பதற்காக ஒரு திருடன் முகமூடி அணிந்து வந்திருந்தான். அவர் ஹோட்டலை சுற்றி பார்த்த நிலையில் அவருக்கு அங்கு எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் இரக்கப்பட்டு அவர் ரூ.20-ஐ அங்கு வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நடைபெற்ற நிலையில் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.