தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக நிலவி வந்த சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இணைந்து மிக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர்.
இனிமேல் தியேட்டர்களில் வெளியாகும் எந்தவொரு புதிய திரைப்படமும், 8 வாரங்கள் (சுமார் 2 மாதங்கள்) கழித்தே ஓடிடி (OTT) தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்ற விதியைத் தயாரிப்பாளர் சங்கம் ஆதரித்துள்ளது.
தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், திரையரங்க வணிகத்தைக் காப்பாற்றவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளத்தை விகிதாச்சார அடிப்படையில் முறைப்படுத்தவும், அட்வான்ஸ் வாங்கிவிட்டுப் படத்தை முடிக்காமல் இழுத்தடிப்பவர்களைக் கட்டுப்படுத்தவும் ஒரு தனிக்குழு அமைக்கப்பட உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அதிரடி மாற்றங்கள் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
