​”திமுக-வின் சமரசப் பேச்சுவார்த்தை படுதோல்வி!” – வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேற முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தங்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் தொகுதிகள் ஒதுக்கப்படாதது குறித்து அதிருப்தியில் இருந்த வேல்முருகன் தரப்புடன், திமுக நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.

​ஏற்கனவே விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகளுக்காக திமுக-வுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், வேல்முருகனின் இந்த வெளியேற்றம் திமுக கூட்டணிக்கு ஒரு ‘செக்’ ஆகப் பார்க்கப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறி மற்றும் முதல் விரிசல், வரவிருக்கும் தேர்தலில் திமுக-வுக்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.