மதுரையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ், செய்தியாளர்கள் சந்திப்பின் போது திமுக மற்றும் தேமுதிக கூட்டணியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். திமுக அரசு மீது தமிழக மக்களுக்குப் பெரும் கோபம் இருப்பதாகவும், அந்தப் பகையில் தேமுதிகவும் சிக்கிக்கொண்டு வரப்போகும் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும் என்றும் அவர் ஆருடம் கூறியுள்ளார்.

​மேலும், எப்போதுமே இல்லாத அவசரத்துடன் திமுக தற்போது தேமுதிகவைச் சேர்த்துக் கொள்வதைப் பார்த்தால், ஆளுங்கட்சிக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டதை அப்பட்டமாகத் காட்டுகிறது என அவர் விமர்சித்துள்ளார். தவெக-வின் இந்த அதிரடித் தாக்குதல் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் தேமுதிக தரப்பில் இதற்கு என்ன பதில் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.