சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தனது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (பிப். 20) மாலை 6:30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வருகிற 23-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று தீவிர பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக-வின் இந்த ஒருங்கிணைந்த அதிரடி நகர்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
