Go Back Modi போல வரும் மக்களவைத் தேர்தலில் Get Out Modi என்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டுள்ளார். கோவையில் திமுக IT Wing 2.0 கூட்டத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரே தேர்தல், ஒரே உடை, ஒரே கட்சி என்ற நிலை வந்து விடும். ஏன் இன்னும் சொல்லப்போனால் இணையதளம் கூட இருக்காது. பாஜகவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் நாகரிகமாக களமாடுங்கள் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்