வருகிற 2026 தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. விஜயின் அரசியல் மாநாடு முடிந்த பிறகு தமிழக வெற்றி கழகம் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பது பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
அதில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலோ அல்லது தனித்தோ தான் 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக கூறியுள்ளனர். இந்த நிலையில் கூட்டணி பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுக தலைமையை ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி. திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்துடன் எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என கூறியுள்ளார்.
