தமிழகத்தில் திமுக கட்சியுடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம் உள்ளிட்ட 16 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில் 2026 தேர்தலில் இந்த கூட்டணி களம் காண்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் அதிக சீட்டுகள் கொடுக்காவிடில் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காங்கிரஸ் நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கூறும் நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என கூறியுள்ளதால் அவருடன் கூட்டணி வைக்க பல காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புவதாகவே அந்த கட்சியின் சில தலைவர்கள் கூட கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை பாராட்டிய நிலையில் திமுக அரசை உத்திர பிரதேச மாநிலத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக இருக்கிறது என விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் பிரவீன் சக்கரவர்த்திக்கு கண்டனம் தெரிவித்திருந்தாலும் கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது காங்கிரஸ் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என வலியுறுத்தி எம்பி மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி @timesofindia செய்தி படித்தேன்,
ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை திரு்@WriterRavikumar திரு @duraivaikooffl , திரு. சண்முகம், திரு். வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?
கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும்.
CPI & @cpimspeak தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், அண்ணன் @MDMKVaiko ,@thirumaofficial அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.
VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி @timesofindia செய்தி படித்தேன்,
ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது:
காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள்…— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) December 31, 2025
