தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பலர் மாற்றுக் கட்சியிலிருந்து பிற கட்சிகளுக்கு மாறுவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக தங்கள் கட்சிகளிலிருந்து விலகி பிற கட்சிகளில் இணைவது அடிக்கடி நடந்து வரும் நிலையில் தற்போதும் அரங்கேறியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த முத்துகிருஷ்ணன் தலைமையில் நேற்று 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதேபோன்று தஞ்சை பட்டுக்கோட்டை பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

அதே நேரத்தில் மயிலாடுதுறை பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஏராளமான நபர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் தலைமையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். மேலும் இவ்வாறு தொடர்ந்து பிற கட்சிகளில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.