எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் தமிழ் புலிகள் கட்சி இணைவதாக அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் இன்று அறிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுகவுடன் கைகோர்ப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்குத் தமிழ் புலிகள் கட்சி உறுதுணையாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு சிறிய கட்சிகள் பிரதானக் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில் இந்தக் கூட்டணி அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.