தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதுச்சேரியில் நேற்று (நவம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களின் மனதை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஏற்கெனவே வென்றுவிட்டது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, தவெக தலைவர் விஜய் பேசும் எதிர்ப்பு அரசியலை மக்கள் ஏற்றுக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “வருகின்ற தேர்தலில் நடிகர் விஜய்க்குத் தோல்விதான் ஏற்படும்” என்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தார். இது, விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பாஜகவின் முக்கிய நிர்வாகியால் முன்வைக்கப்படும் கடுமையான விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.