எதிர்வரும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற கேள்விக்குப் பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளதுபோல தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுமா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டதை போல அல்லாது, வரும் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அகில இந்திய பாஜக தலைமையே பேசி முடிவெடுக்கும்” என்று பதிலளித்தார்.
இதன் மூலம், கடந்த தேர்தல்களைக் காட்டிலும் அதிகத் தொகுதிகளில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளதற்கான மறைமுகக் கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
