
திமுகவில் அண்டி பிழைக்கும் திமுக அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை கூற எந்த அருகதையும் இல்லை என்று ரகுபதியை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார்.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் அனைத்து சமூக விரோத செயல்களிலும் திமுகவினர் ஈடுபட்டு வருவது செய்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. குற்றவாளிகளின் கூடாரமாக திகழும் திமுகவினர் தங்களுடைய களங்கத்தை மறைப்பதற்கு அதிமுக மீது பழி போட்டு பிரச்சினையை திசை திருப்புவது வாடிக்கையாக இருக்கிறது.
சுங்க சாவடியில் பணம் செலுத்தாமல் சமூக விரோத செயல்களுக்கு திமுக கொடி லைசென்ஸ் என்பதை ஒப்பு கொண்டுள்ளார்கள் போலீஸ். திமுக கொடி கட்டிய காரில் வந்து பெண்களை மிரட்டியவரிடம் வற்புறுத்தி அவருடைய உறவினர்கள் அதிமுகவினர் என போலீஸ் வாக்குமூலம் வாங்கி உள்ளார்கள். திமுகவில் அண்டி பிழைக்கும் திமுக அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை கூற எந்த அருகதையும் இல்லை” என்று கூறியுள்ளார்.