தேனி மாவட்ட திமுகவில் ஓபிஎஸ் வருகைக்குப் பிறகு கடும் அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வேட்பாளர் தேர்வு மற்றும் பூத் கமிட்டி பணிகளில் பழைய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால், பலரும் அதிருப்தியில் இருந்துள்ளனர். இதன் உச்சகட்டமாக, ஒருங்கிணைந்த தேனி மாவட்ட முன்னாள் செயலாளரும், திமுக தீர்மானக் குழு இணைச் செயலாளருமான ஜெயக்குமார் உள்ளிட்ட 50 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இருந்து விலகியுள்ளனர்.

​அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் தேனியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இப்படி கூண்டோடு விலகியது திமுக தலைமையைத் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.