தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு மாய பிம்பம் என்றும், அவரைப் பற்றி பேசி அந்தப் பிம்பத்தைப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேவையில்லாமல் விஜய்க்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

​பல ஆண்டுகளாகத் தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றியதன் அடிப்படையில், மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கத் தயாராக உள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் வருகையைக் கடுமையாக விமர்சித்த இனிகோ இருதயராஜின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.