அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பக்குவப்படாத அரசியல்வாதி. அவருடைய கருத்துக்களை தமிழக மக்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருக்கும் எந்த ஒரு தமிழராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் பாஜகவை தமிழகத்தில் ஒரு பெரிய கட்சியாக பார்க்கவில்லை. அவர்களை ஒரு சிறு குழந்தையாகவே கருதுகிறோம். அண்ணாமலைக்கு வேறு வழி இல்லாமல் எங்கள் தலைவர்களை பற்றி பேசி வாங்கி கட்டிக் கொள்கிறார்.
ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தார். அப்படி இருக்கும்போது ஜெயலலிதாவை ஒரு குறிப்பிட்ட மதத்துக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அவர் திமுகவின் பி டீம் ஆக செயல்படுகிறார். ஜெயலலிதாவை குறிப்பிட்ட மதத்திற்குள் கொண்டுவர முயற்சிப்பது ஒரு இழிவான செயல். மேலும் அண்ணாமலை அரசியல்வாதி கிடையாது. அவர் அரசியல் வியாதி அல்லது அரசியல் வியாபாரி என்று கூறினார்.
