பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி பலரது இதயங்களையும் வென்று வருகிறது. ஒரு ஆசிரியை தனது மாணவர்களிடம் தனக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும் என்று எதேச்சையாகக் கூறியுள்ளார். ஆசிரியையின் மீது கொண்ட அன்பின் காரணமாக, மாணவர்கள் தினமும் தங்கள் மதிய உணவுப் பெட்டியுடன் தங்களுக்குப் பிடித்தமான பழங்களையும் ஆசிரியைக்காகக் கொண்டு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சிறுவர்களின் கள்ளமில்லா அன்பும், அவர்கள் காட்டும் அக்கறையும் காண்போரை நெகிழச் செய்கிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவில், மாணவர்கள் வரிசையாக வந்து ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் என விதவிதமான பழங்களை ஆசிரியைக்கு அன்பளிப்பாக வழங்குவதைக் காணலாம்.
View this post on Instagram
“>
மேலும் “ஆசிரியர்கள் வெறும் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை, மாணவர்களின் மனதில் நீங்காத இடத்தையும் பிடிக்கிறார்கள்” என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. வெறும் வார்த்தைகளால் சொல்லப்பட்ட விருப்பத்தை, செயலில் காட்டிய இந்த மழலைகளின் அன்பு, பெங்களூருவின் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக்கியுள்ளது.
