இத்தாலியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டியும்  சம்பள உயர்வு கேட்டும் பத்தாயத்திற்கு மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நம் நாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 2,50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விமான சேவை இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி கூறுகையில், “லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் மக்களையும் சிரமத்திற்கு ஆளாக்காமல் விமான நிலைய பணியாளர்கள் எப்போதும் போல் பணிக்கு திரும்ப வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.