ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் செட்டொக் என்பவர் தனது நாயுடன் ஏப்ரல் மாத தொடக்கத்தில் மெக்சிகோவில் இருந்து பிரென்ச் பாலினேஷியாவிற்கு கடல் வழிப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் இவர் பயணம் மேற்கொண்ட சில வாரங்களிலேயே வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கடலில் காணாமல் போய் உள்ளார். மூன்று மாதங்கள் இவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில் பசுபிக் பெருங்கடலின் நடுவே இவரும் இவரது வளர்ப்பு நாய் பெல்லாவும் மிதக்கும் படகு ஒன்று தனியாக தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவ்வழியாக ஹெலிகாப்டர் ஒன்று சென்றபோது அதிலிருந்தவர்கள் நடுக்கடலில் படகில் தவித்தவ டிம் மற்றும் அவரது நாயை பத்திரமாக மீட்டு அழைத்து வந்துள்ளனர். அவரிடம் விசாரித்த போது மூன்று மாதங்களாக மழை தண்ணீரை குடித்தும் பச்சை மீன்களை சாப்பிட்டும் வாழ்ந்ததாக கூறியுள்ளார்.