நடிகர் சூரி  2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று  அழைக்கப்பட்டார். அதன்பின்னர் பா படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில்  ஒருநாள் மட்டும் கூடுவிட்டு கூடு பாயும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று நடிகர் சூரியிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சூரி, விஜய்சேதுபதி உடலுக்குள் சென்று பாலிவுட் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கி கொள்வேன். மேலும், ஷாருக்கானிடம் என்ன மச்சான் எப்படி இருக்க ? எனக் கேட்பேன். தீபிகா படுகோனிடம் 2 நிமிஷம் பேசிவிட்டு வந்துவிடுவேன் என நகைச்சுவையாகக் கூறினார்.