மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், திடீரென நுழைந்த குரங்கு ஒன்று ஆட்சியரின் நாற்காலியிலேயே அமர்ந்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரேலி மாவட்டத்தின் விகாஸ் பவனில் கடந்த புதன்கிழமை விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் ஒவ்வொருவராகத் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு கூட்டத்திற்குள் நுழைந்தது.
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அந்தக் குரங்கு நேராக மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால் அமர்ந்திருந்த நாற்காலிக்குச் சென்றது. உடனே ஆட்சியர் சிரித்துக்கொண்டே, நாற்காலியைக் காண்பித்து “அமர்” (Sit) என்று கூறினார். ஆட்சியர் சொன்னதைக் கேட்டது போல, அந்தக் குரங்கும் சிறிது நேரம் அந்த நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தது.
விசாரணையில் அந்தக் குரங்கின் பெயர் ‘மாத்ரு’ என்பது தெரியவந்தது. கலெக்டரேட் வளாகத்தில் வசிக்கும் இந்தக் குரங்கு, அங்கிருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே மிகவும் பிரபலம். ‘மாத்ரு’ அவ்வப்போது இது போன்ற முக்கியக் கூட்டங்களுக்குள் நுழைந்து சேட்டைகள் செய்வது வழக்கமாம்.
यूपी : बागपत में “मटरू” लंगूर भरी मीटिंग में DM अस्मिता लाल के पास पहुंच गया। 2015 बैच की IAS अस्मिता एनिमल लवर हैं। मटरू उनका पेट एनिमल है और DM कार्यालय परिसर में ही घूमता रहता है। pic.twitter.com/gqWLDZadoA
— Sachin Gupta (@Sachingupta) April 17, 2026
இரண்டு மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, மனுக்களைப் பெற ஆட்சியர் அஸ்மிதா லால் நேரில் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மாத்ருவை கண்டதும், ஆட்சியர் தரைமட்டத்திலேயே அமர்ந்து அதனுடன் விளையாடியுள்ளார். ஆட்சியருக்கும் அந்தக் குரங்கிற்கும் இடையிலான இந்தப் பாசப் பிணைப்பு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
