பிரதமர் நரேந்திர மோடி இன்று 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். அதற்காக அவர் இன்று காலை டெல்லிக்கு கிளம்பி சென்றார். அப்போது அவர் சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, நான் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள செல்கிறேன். ஜவர்கலால் நேருவுக்கு பிறகு மோடி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டது அவருடைய சாதனை. அதன் பிறகு நாட்டில் வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான தேர்தலுக்கு அறிகுறி என்று கூறினார். மேலும் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்துள்ளது என்று கூறினார்.
