தமிழ்நாடு முழுவதும் என்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 20.36 லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள். அதன்படி மாநில முழுவதும் காலை 9 மணிக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடங்கியுள்ள நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிதாக INVALID மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது பதில்களை தேர்வு செய்யும் போது முதலில் தவறான பதிலை தேர்வு செய்துவிட்டு அதனை அடித்துவிட்டு மீண்டும் புதிய பதிலை சிலர் தேர்வு செய்வார்கள். அப்படி தேர்வு செய்தால் அந்த வினாவுக்கு மதிப்பெண் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கேள்விக்கான பதிலை அடித்து விட்டு புதிய பதிலை தேர்வு செய்தால் அதற்கான மதிப்பெண் கணக்கிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
