தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் நாகரிகம் மற்றும் தொகுதி மக்கள் மீதான நன்றியைப் பதிவு செய்தார்.

“என்னைத் தேர்ந்தெடுத்துச் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எனது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது உரையைத் தொடங்கிய அவர், ஆளுநருக்கும் தமக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்தவொரு விரோதமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

மேலும், அவையில் குறைகளைச் சுட்டிக்காட்டியபோது கண்ணியமான முறையைக் கடைப்பிடித்த எதிர்க்கட்சித் தலைவருக்கும், அரசின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.