2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக அரசியலில் இன்று அரங்கேறிய ஒரு நிகழ்வு அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. தமிழக சட்டமன்றப் பேரவையில் இன்று (பிப்ரவரி 20, 2026) உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர், யாரும் எதிர்பாராத ஒரு வாழ்த்தைப் பதிவு செய்தார்.

மேலும் “நடந்து முடிந்த ஆட்சிக்காலத்தில் மக்கள் நலன் காத்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்த வாழ்த்தின் பின்னணியில் உள்ள ‘கூட்டணி அரசியல்’ கணக்குகள் இன்னும் சுவாரஸ்யமானவை. அந்த உறுப்பினர் பேசுகையில், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடும், அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் நல்வாழ்த்துகளோடும் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டும்” எனக் குறிப்பிட்டது, அதிமுகவின் ஒரு பிரிவு திமுகவை நோக்கி மென்போக்கு காட்டுகிறதோ என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஒரு தரப்பினர் ஆளுங்கட்சித் தலைவருக்குப் பகிரங்கமாக வாழ்த்து தெரிவித்தது, தமிழக அரசியல் களத்தில் புதிய சமன்பாடுகள் உருவாக வாய்ப்புள்ளதை உணர்த்துகிறது.