நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக கூறப்பட்ட நிலையில் இணையவில்லை. இதைத்தொடர்ந்து திமுகவில் அவர் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை காளியம்மாள் எந்த கட்சியிலும் இணையாத நிலையில் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது காளியம்மாள் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை இன்று சந்தித்தார்.

இதன் காரணமாக அவர் பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளிவந்த நிலையில் தொடர்பாக அவரே செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் கொடுத்தார். அதாவது மக்கள் பிரச்சனைகள் தொடர்பாகவே பாஜக தலைவரை சந்தித்து பேசியதாகவும் அந்த கட்சியில் இணையவில்லை எனவும் விளக்கம் கொடுத்தார். மேலும் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் காளியம்மாள் எந்த கட்சியில் இணைய போகிறார் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.