சென்னையை சேர்ந்தவர்கள் விஷ்ணு (19) மற்றும் அஸ்வதி (19). இவர்கள் இருவரும் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஏலகிரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் டிராவிட் (21), சக்தி பிரியா (21) ஆகியோரும் சென்றனர். இவர்கள் ஒரு காரில் சென்னையில் இருந்து நேற்று காலை கிளம்பிய நிலையில் வேலூர் வழியாக மோட்டூர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் டயர் வெடித்தது.
இதனால் கார் தாறுமாறாக ஓடி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி மறுபுறம் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்குள் புகுந்தது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஸ்வதி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
