தமிழக சட்டசபையில் நேற்று அரங்கேறிய அதிரடி காட்சிகள் அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளன. முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எழுந்து நிற்கலாம் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் அறிவித்த அடுத்த விநாடியே, அதிமுகவைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். பிரதான எதிர்க்கட்சியின் இந்த எதிர்பாராத ஆதரவைக் கண்ட முதலமைச்சர் விஜய், முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையுடன் அமைதியாக அமர்ந்திருந்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

​எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளுங்கட்சியின் தீர்மானத்திற்கு இப்படித் தானாக முன்வந்து ஆதரவு தெரிவித்தது ஒரு மிகப்பெரிய ‘டிவிஸ்ட்’ ஆக பார்க்கப்படுகிறது. சட்டசபை வரலாற்றில் இது போன்ற காட்சிகள் மிக அபூர்வமானவை என்பதால், இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அதிமுக எம்.எல்.ஏக்களின் இந்தத் திடீர் மனமாற்றம் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆளுமை அனைவரையும் கவர்ந்து வருகிறது.