நடிகை பூஜா ஹெக்டேவின் பாட்டி காலமானார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  தற்போது விஜய்யுடன் ஜனநாயகன்  படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ரெட்ரோ படத்திலும் நடித்துள்ளார். அக்டோபர் மாதம் ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது.   ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார்.

அடுத்து இந்தியில் வருண் தவானுடன் Hai Jawani Toh Ishq Hona Hai என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் சமீபத்தில் ரிஷிகேஷில் நடந்து முடிந்தது. அங்கு நடந்த ஷூட்டிங்கின்  கடைசி நாளில் பூஜா ஹெக்டே மற்றும் வருண் தவான் இருவரும் ஜோடியாக ஆற்றில் குதித்து இருக்கின்றனர். அந்த வீடியோவை வெளியிட்டு ஷூட்டிங் நிறைவு பெற்றதை படக்குழு அறிவித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)