நொய்டா நகரின் செக்டார் 168 பகுதியில் உள்ள கோல்டன் பாம் சொசைட்டியில், லிஃப்ட் ஒன்றில் த நாகப்பாம்பு வந்தது குடியிருப்பாளர்களிடம் பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அக்டோபர் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று, லிஃப்டுக்காக காத்திருந்த சிலர், கதவுகள் திறக்கப்படும்போது தரையில் சுருண்ட நிலையில் இருந்த பாம்பைப் பார்த்துள்ளனர். உடனடியாக சங்க பராமரிப்பு குழுவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
नोएडा के सेक्टर-168 स्थित गोल्डन Palm सोसायटी की लिफ्ट में निकला सांप, कड़ी मशक्कत के बाद सांप का किया गया रेस्क्यू। #noidakhabar @vinodsharmanbt pic.twitter.com/9dwiy17Zod
— NoidaKhabar.com (@noidakhabar) October 5, 2025
உடனடியாக எச்சரிக்கையுடன் செயலில் ஈடுபட்ட பராமரிப்பு குழுவினர், குப்பைத் தொட்டியைப் பயன்படுத்தி பாம்பை கட்டுப்படுத்தினர். பிறகு அதை அருகிலுள்ள திறந்த வெளிக்குச் சென்று பாதுகாப்பாக விடுவித்தனர். இந்நிகழ்வின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதில், பழுப்பு நிற நாகப்பாம்பு ஒன்று லிஃப்ட் தரையில் பதுங்கியிருப்பதும், மீட்புப் பணியாளர்கள் அதை மெதுவாக பிடிப்பதும் காணப்படுகிறது.
