ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள நர்சிங்கியில், கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சனிக்கிழமை, வேகமாக வந்த BMW கார், சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில், ஒரு பெண் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ‘மை ஹோம் அவதார்’ சர்க்கிள் அருகே நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதில், சிவப்பு சிக்னலுக்கு காத்திருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில், பின்னால் இருந்து வேகமாக வந்த BMW கார் நேராக மோதியதை தெளிவாக காண முடிகிறது.
Hyderabad 🚨 ⚠️
BMW Driver overspeeding + zig-zag driving, lost control before the Signal. Rearended Car & 2 wheeler & a pileup…
Overspeeding adding up max #roadrisks for all, this clip showcasing it all.
VC: @SandeepGattim
pic.twitter.com/aIh2H67x2z— Dave (Road Safety: City & Highways) (@motordave2) October 5, 2025
விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூன்று வாகனங்களும் சேதமடைந்துள்ளன. விபத்துக்குப் பிறகு, அபிஷேக் ஜி. சந்திரா என்ற BMW ஓட்டுநர், சம்பவ இடத்திலிருந்து தப்ப முயன்றதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், காவல்துறையினர் பின்னர் அவரை கைது செய்தனர். விபத்தில் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு, நர்சிங்கி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த BMW கார் மாதவி மேகலா என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
