ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரபலமான இனிப்பு கடைக்கு வெளியே, ஒரு பெண்ணை ஒருவர் பாலியல் முறையில் தொட்டதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை, ‘ராஜஸ்தான் மிஷ்தான் பந்தர்’ எனும் இனிப்பு கடையின் முன் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடையின் கவுண்டரிலிருந்து வெளியே வந்த பெண்ணை, அந்த இடத்தில் இருந்த கௌதம் என்ற நபர், தகாத முறையில் மார்பகத்தில் தொட முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
राजस्थान मिष्ठान भंडार: गौतम ने महिला से छेड़छाड़ की, जनता ने पीटा
जयपुर, 6 अक्टूबर 2025: राजस्थान के एक प्रसिद्ध मिष्ठान भंडार में रविवार शाम को एक महिला के साथ छेड़छाड़ का मामला सामने आया। आरोपी गौतम नामक युवक ने काउंटर पर खड़ी महिला को गलत तरीके से छूने की कोशिश की, जिसका… pic.twitter.com/dzYyTtuVgL— GNW_News (@gnwnews_a) October 6, 2025
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்தவுடன், அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக கூச்சலிட்டு எதிர்வினை தெரிவித்ததையடுத்து, கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்ட நபரை சுற்றி வைத்து தடுத்து நிறுத்தினர். அவரை மக்கள் தாக்கியதுடன், கடுமையாக திட்டிய பிறகு, ஜெய்ப்பூர் நகர போலீசிடம் ஒப்படைத்தனர்.
ஜெய்ப்பூர் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தடுப்பு பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
