உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது. இதில், ஒருவரது சமநிலைத் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் தலையில் பெரிய சமோசா தட்டைக் கொஞ்சம் கூட நகராமல் வைத்துக் கொண்டு, இரு கைகளால் பைக்கை ஓட்டுகிறார்.
இந்த காணொளி உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோவில், குறுகிய மற்றும் நெரிசலான சாலையில், எதிரே வரும் போக்குவரத்துக்கு மத்தியில் அந்த நபர் தலையில் சமோசா தட்டுடன் நிதானமாக பைக் ஓட்டுகிறார். இதைப் பார்க்கும் போது, இது அவரது அன்றாட பணியின் ஒரு பகுதியாகத் தெரிகிறது.
View this post on Instagram
பொதுவாக, வாகனம் ஓட்டும் போது, தலையில் எதையாவது ஆதரவின்றி வைத்திருப்பது சவாலானதுமன்றி ஆபத்தானதும்கூட. சிறிய தவறும் சமோசாக்கள் கவிழ்வதோடு மட்டுமல்லாமல் விபத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஆனால், வீடியோவில் உள்ள நபர் மிகுந்த நிதானத்துடன் மற்றும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கிறார்.
இந்த வீடியோ, சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “யாரும் சொல்வதைக் கவனிக்காமல் உங்கள் இலக்கை நோக்கி எப்படி நகர்வது என்பதை பரேலி குடியிருப்பாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். கோஹாரா பீர் முதல் குளியலறை வரை, தலையில் சமோசா தட்டுடன்!” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. வீடியோ தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும் 52,000-க்கும் அதிகமானோர் இது பற்றி விருப்பத்தையும், கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். பலர் வேடிக்கையான முறையிலும், சிலர் சாலையின் தரத்தையும், சுகாதாரத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
