கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் நேற்று ஒரு காட்டு யானை திடீரென புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, போளுவாம்பட்டி வனப்பகுதி வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து, மகாலட்சுமி கோவில் வழியாக அடர்ந்த வனத்துக்குள் விரட்ட முயன்றனர். அவர்கள் ஜீப்பில் செல்லும் தருவாயில், திடீரென அந்த யானை திரும்பி வனத்துறை வாகனத்தை நோக்கி விரைந்தது. அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் வாகனத்தை நிறுத்திய நிலையில், ஆத்திரத்தில் பிளிறிய யானை துதிக்கையால் ஜீப்பை தாக்கியது.

“>

 

இந்த தாக்குதலின் போது ஜீப்பின் கண்ணாடி நொறுங்கி சேதமடைந்தது. அதே நேரத்தில், வனத்துறை ஊழியர்கள்  வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் உயிர் தப்பினர். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, அது வைரலாக பரவி வருகிறது. தற்போது வனத்துறையினர் அந்த யானையின் அடுத்த நகர்வுகளை கவனித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.