டிராக்டர் மீது சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் அரியூர் அருகே நேற்று டிராக்டர் உரம் ஏற்றி சென்றது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதனால் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.